Posts

Showing posts from April, 2022

ரோட்டுக்கடை காளான் இனி வீட்டிலேயே ரெடி

Image
 ரோட்டுக்கடை காளான் இனி வீட்டிலேயே செய்யலாம் •முட்டைகோஸ் பொடிதாக நறுக்கியது ( 150 கிராம் ) • மைதா மாவு - 1 கப் சோள மாவு -1/2 கப் . தனி மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு . புட் கலர் - தேவைப்பட்டால் . எண்ணெய் - பொரித்து எடுக்கும் அளவிற்கு ( 3 டேபிள் ஸ்பூன் ) வெங்காயம் - 1 நறுக்கியது பச்சை மிளகாய் - நறுக்கியது 1 . கருவேப்பிலை - 1 கொத்து . இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் . மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் தக்காளி சாஸ் - 2 ஸ்பூன் சோயா சாஸ் - 1 ஸ்பூன் • கரமசாலா -1/2 ஸ்பூன் முதலில் முட்டைகோஸை பொடிதாக நறுக்கி கொள்ளவும் . அதனுடன் மைதா மாவினை சேர்த்து தண்ணீர் சிறிதளவு சேர்த்து தளதளவென்று பிசைந்துகொள்ளவும்  அடுத்து சோள மாவினை 1/2 கப் சேர்த்து பிறகு காரத்திற்காக தனி மிளகாய்த்தூள் 1 ஸ்பூன் , தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.  இப்பொது கடாயில் எண்ணெயை ஹீட் செய்யவும் . எண்ணெய் நன்றாக ஹீட் ஆனதும் பிசைந்து வைத்ததை உருண்டையாக உருட்டி பொரித்து எடுத்துக் கொள்ளவும்.  பொரித்து எடுத்த பிறகு உதிரி உதிரியாக பிரித்து தனியாக எடுக்கவும் . அடுத்து கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள வெங்கா

ஆட்டுக்கறி வாங்குவோருக்குச் சில குறிப்புகள் :

Image
நீங்கள் கறி வாங்கச் செல்லும்போது , தொடை , சந்துக் கறிகளைக் கேட்டு வாங்குவீர்கள் . ஏனெனில் , அப்பகுதிகளில் சதை அதிகமாக இருக்கும் . எனினும் இப்பகுதி இறைச்சி சற்றுக் கடினமாக இருக்கும். பொதுவாக நடமாடும்போது அதிகமாக அசையும் தசைகள் கடினமாக இருக்கும் .மாறாக நெஞ்சுப் பகுதி மற்றும் முதுகுப் பகுதித் தசைகள் மென்மையாக இருக்கும் . இதனை அறிந்த நீங்கள் வாங்கினால் சிறப்பாக இருக்கும்.  வெள்ளாட்டு இறைச்சியில்  உள்ள  சத்துப் பொருட்கள் : ஈரப்பதம்– 74.2 % புரதம் — 21.4 % கொழுப்பு —3.6 % தாது உப்பு —1.1 % மாமிசத்திற்கும் சில மருத்துவக் குணங்களும் உண்டு.  ஆனால் நோயுற்ற ஆடுகளில் சிறிது இரத்தம் தேங்கியிருக்கும் . இறந்து போன பின் அறுத்துத் தொங்கவிட்டிருந்தால் இரத்தம் முழுவதும் இறைச்சியில் படிந்திருக்கும் . ஒரே வயதான ஆண் , பெண் ஆடுகளில் பெட்டை ஆட்டு இறைச்சியே நன்றாக இருக்கும் . மேலும் , நீங்கள் வாங்கும் இறைச்சி நல்ல தரமானதுதானா என்பதனை அறிய இறைச்சியில் தேங்கி இருக்கும் இரத்த அளவே அளவுகோல் .  நல்ல உடல் நலத்துடன் கூடிய ஆடு வெட்டப்படும் போது இரத்தம் முழுவதுமாக வடிந்து விடுவதால் , இறைச்சியில்

காய்கறி வாங்குவது ஒரு கலை

Image
 காய்கறி வாங்குவது ஒரு கலை - தெரியுமா உங்களுக்கு? நிறைய பேருக்கு காய்கறி வாங்கத் தெரிவதில்லை.  இது கசப்பான உண்மை.  கேட்டால் அதெல்லாம்  என் மனைவி பார்த்துக்கொள்வாள் என்பார்கள். நிறைய பெண்களுக்கும் கூட இதைப்பற்றி சரியாக தெரிவதில்லை.  அதற்காகத்தான் இந்தப் பதிவு. காய்கறி வாங்குவது ஒரு கலைதான். நல்ல காய்கறியாகவும் வாங்க வேண்டும்.  அவை வீணாகாதபடி பாதுகாக்கவும் வேண்டும். சரி ஒவ்வொன்றாக பார்க்கலாம்... வாழைக்காய் .. முதலில் வாழைக்காய்.  வாழைக்காயை கறியாகவோ வதக்கலாகவோ  செய்ய வேண்டுமென்றால்  காம்பு ஒடிந்த இடத்தில் சற்று வெள்ளையாக இருப்பதைப் பார்த்து வாங்கவேண்டும்.  சற்று இளசாக இருந்தாலும் பரவாயில்லை. வறுவல், பஜ்ஜி முதலியவை செய்யவேண்டுமென்றால்  நல்ல பச்சை நிறத்தில் முற்றியதாக பார்த்து வாங்கவேண்டும். வாங்கி வந்தபிறகு காயைச் சுத்தமாக பால் போக கழுவிவிட்டு,  ஒரு வாளித் தண்ணீரில் போட்டு வைத்தால்,  வாடாமலும் பழுக்காமலும் இருக்கும். உருளைக்கிழங்கு செம்மண்ணில் பயிரான  உருளைக் கிழங்குகளே உயர்வானவை. கெட்டியாகவும் தழும்புகள் இல்லாமலும் ஓட்டைகள் இல்லாமலும் இருக்கிறதா என்று பார்த்து வாங்கவேண்டும். பச்சையாகவோ அ

மளிகை பொருட்கள் பட்டியல்

Image
  மளிகை பொருட்கள் பட்டியல்   பருப்பு வகைகள் துவரம் பருப்பு கடலை பருப்பு பாசி பருப்பு உளுந்து  கடலை பச்சை பாசி பயிர் எள்ளு ஓமம் மைசூர் தால் கடலை மாவு அரிசி மாவு சோள மாவு சுக்கு கருப்பு கடலை வெள்ளை கடலை பட்டாணி  சமையல் எண்ணெய் நல்லெண்ணெய் நெய் இட்லி அரிசி சமையல் அரிசி (சாதம் வடிக்கும் வகை ) கோதுமை மாவு மைதா மாவு காபி தூள் டீ தூள் சர்க்கரை ரவா சேமியா முந்திரி திராச்சை ஏலக்காய் வெல்லம் மசாலா வகைகள் கடுகு உளுந்தம் பருப்பு  ஜீரகம் சோம்பு  பெருஞ்சீரகம்  வெந்தயம் வரமிளகாய் மிளகு மல்லி பெருங்காயம் கிராம்பு பட்டை பிரிஞ்சி இலை பிரியாணி மசாலா பொடி வகைகள் மிளகாய் பொடி சாம்பார் பொடி  ராச பொடி இட்லி பொடி மஞ்சள் பொடி கரம் மசாலா பொடி உப்பு காய்கறிகள் வெங்காயம் தக்காளி பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் கறிவேப்பிலை மல்லி தழை  கத்தரிக்காய் வெண்டைக்காய் உருளை கிழங்கு கருணை கிழங்கு கீரை காரட் வெள்ளரிக்காய் பீன்ஸ் கோவக்காய் சுரைக்காய் முட்டை கோஸ்