ஆட்டுக்கறி வாங்குவோருக்குச் சில குறிப்புகள் :

நீங்கள் கறி வாங்கச் செல்லும்போது , தொடை , சந்துக் கறிகளைக் கேட்டு வாங்குவீர்கள் . ஏனெனில் , அப்பகுதிகளில் சதை அதிகமாக இருக்கும் . எனினும் இப்பகுதி இறைச்சி சற்றுக் கடினமாக இருக்கும்.



பொதுவாக நடமாடும்போது அதிகமாக அசையும் தசைகள் கடினமாக இருக்கும் .மாறாக நெஞ்சுப் பகுதி மற்றும் முதுகுப் பகுதித் தசைகள் மென்மையாக இருக்கும் . இதனை அறிந்த நீங்கள் வாங்கினால் சிறப்பாக இருக்கும். 


வெள்ளாட்டு இறைச்சியில்  உள்ள  சத்துப் பொருட்கள் : ஈரப்பதம்– 74.2 % புரதம் — 21.4 % கொழுப்பு —3.6 % தாது உப்பு —1.1 % மாமிசத்திற்கும் சில மருத்துவக் குணங்களும் உண்டு. 



ஆனால் நோயுற்ற ஆடுகளில் சிறிது இரத்தம் தேங்கியிருக்கும் . இறந்து போன பின் அறுத்துத் தொங்கவிட்டிருந்தால் இரத்தம் முழுவதும் இறைச்சியில் படிந்திருக்கும் . ஒரே வயதான ஆண் , பெண் ஆடுகளில் பெட்டை ஆட்டு இறைச்சியே நன்றாக இருக்கும் .


மேலும் , நீங்கள் வாங்கும் இறைச்சி நல்ல தரமானதுதானா என்பதனை அறிய இறைச்சியில் தேங்கி இருக்கும் இரத்த அளவே அளவுகோல் .  நல்ல உடல் நலத்துடன் கூடிய ஆடு வெட்டப்படும் போது இரத்தம் முழுவதுமாக வடிந்து விடுவதால் , இறைச்சியில் தேங்கி இருக்காது. 


ஆட்டின்  தலை :  இதயம் சம்பந்தமான பிணியை நீக்கும் . குடலுக்குப் பலத்தைக் கொடுக்கும் . கபால பிணிகளைப் போக்கும் . 


கழுத்துக்கறி :  மிகவும் மென்மையாகவும் , சுவையாகவும் இருக்கும் . குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் , மெல்லுவதற்கு ஏற்றது . முக்கியமாக இதில் கொழுப்பு இருக்காது .



ஆட்டின் கண் : கண்களுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும் . பார்வை துலங்கும் . ஆட்டின்  இதயம்  தைரியம் உண்டாக்கும்  மன ஆற்றலைப் பெருக்கும்  இதயத்திற்குப் பலம் தரும் .



ஆட்டின்  நாக்கு : சூட்டை அகற்றும் . தோலுக்குப் பசுமை தந்து பளபளப்பாக்கும் . ஆட்டுக்  கொழுப்பு இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும் . எவ்வித இரணத்தையும் ஆற்றும் . 


ஆட்டின்  மார்பு : கபத்தை அறுக்கும் . மார்புக்குப் பலத்தைக் கொடுக்கும் . மார்புப் பாகத்தில் புண் இருந்தால் ஆற்றும் .



ஆட்டின்  நுரையீரல் :  உடலின் வெப்பத்தை ஆற்றிக் குளிர்ச்சியை உண்டாக்கும் . நுரையீரலுக்கு மிகுந்த வலு தரும் . 


ஆட்டுக்கால்கள் :  எலும்புக்குப் பலம் தரும் . தைரியம் ஏற்படுத்தும் . கால்களுக்கு ஆற்றல் தரும் . 



ஆட்டுக் குடல் :  வயிற்றில் உள்ள குடல் புண்களை ஆற்றும் சக்தி ஆட்டுக் குடலுக்கு உண்டு. 




Comments

Popular posts from this blog

கொத்தமல்லி இலைகளின் நன்மைகள்

வெந்தய விதைகளின் நம்பமுடியாத ஆரோக்கியம் மற்றும் அழகு நன்மைகள்

மளிகை பொருட்கள் பட்டியல்