ரோட்டுக்கடை காளான் இனி வீட்டிலேயே ரெடி
ரோட்டுக்கடை காளான் இனி வீட்டிலேயே செய்யலாம்
•முட்டைகோஸ் பொடிதாக நறுக்கியது ( 150 கிராம் ) • மைதா மாவு - 1 கப் சோள மாவு -1/2 கப் . தனி மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு . புட் கலர் - தேவைப்பட்டால் . எண்ணெய் - பொரித்து எடுக்கும் அளவிற்கு ( 3 டேபிள் ஸ்பூன் ) வெங்காயம் - 1 நறுக்கியது பச்சை மிளகாய் - நறுக்கியது 1 . கருவேப்பிலை - 1 கொத்து . இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் . மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன் • கரமசாலா -1/2 ஸ்பூன்
முதலில் முட்டைகோஸை பொடிதாக நறுக்கி கொள்ளவும் . அதனுடன் மைதா மாவினை சேர்த்து தண்ணீர் சிறிதளவு சேர்த்து தளதளவென்று பிசைந்துகொள்ளவும்
அடுத்து சோள மாவினை 1/2 கப் சேர்த்து பிறகு காரத்திற்காக தனி மிளகாய்த்தூள் 1 ஸ்பூன் , தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
இப்பொது கடாயில் எண்ணெயை ஹீட் செய்யவும் . எண்ணெய் நன்றாக ஹீட் ஆனதும் பிசைந்து வைத்ததை உருண்டையாக உருட்டி பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பொரித்து எடுத்த பிறகு உதிரி உதிரியாக பிரித்து தனியாக எடுக்கவும் . அடுத்து கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள வெங்காயம் , நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் 1 , கருவேப்பிலை 1 கொத்து சேர்த்து லேசாக வதக்கிவிடவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து காரத்திற்காக 1 ஸ்பூன் மிளகாய்த்தூளை சேர்க்கவும் . அதனுடன் மஞ்சள் தூள் கால் ஸ்பூன் , உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்கிவிடவும் .
நன்றாக வதங்கியதும் பொரித்து எடுத்த தனியாக வைத்துள்ள முட்டைகோஸை இதில் சேர்த்துகொள்ளவும் .
அடுத்ததாக தக்காளி சாஸ் 2 ஸ்பூன் , 1 ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும் . அதனுடன் சோள மாவில் தண்ணீர் சேர்த்து அதில் சேர்த்து வதக்கவும்.
இறக்கும் முன்பு கரமசாலாவினை சேர்த்துக்கொள்ளவும் . தனியாக ஒரு பவுலில் மாற்றிக்கொள்ளவும் . இப்போது பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதன் மேல் தூவிவிடவும் . அடுத்ததாக பொடிதாக நறுக்கி வைத்துள்ள புதினா கொத்தமல்லி இலையை தூவவும் . ரோட்டுக்கடை ஸ்டைலில் முட்டைகோஸ் காளான் ரெடியாகிட்டு ..
Comments
Post a Comment